கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நாளை நிறைவு
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரியில் நடந்து வரும், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளையுடன் (20ம் தேதி) நிறைவு பெறுகிறது.
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள திடலில் கடந்த ஜூன், 21- முதல், 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நாளை (20-ம் தேதி) மாலை, 6:00 மணியளவில் கண்காட்சி அரங்கில் நடைபெறுகிறது. சிறந்த முறையில் அரங்கம் அமைத்த அரசுத்துறை அலுவலர்கள், சிறந்த 'மா' சாகுபடி விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நிறைவு நாளில் நடைபெறும் நாய்கள் கண்காட்சியில், அரிய வகை நாய் இனங்கள் பங்கு பெற உள்ளன. நாளை காலை 11:30 முதல் 12:30 வரை போட்டியில் பங்கேற்கும் நாய்களுக்கான முன்பதிவு, நாய்கள் காட்சிப்படுத்துதல், 12:30 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழுடன் வர வேண்டுமென மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ரயில்களில் உணவு பொருள் விற்பவர்களுக்கு கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது