பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஒப்புதலுடன் புதுச்சேரியில் உள்ள 5 மாவட்டத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டள்ளனர். அதன்படி உழவர்கரை மாவட்ட தலைவராக உலகநாதன், காரைக்கால் மாவட்ட தலைவராக முருகதாஸ், அரியாங்குப்பம் மாவட்ட தலைவராக சுகுமாறன், வில்லியனுார் மாவட்ட தலைவராக அனிதா, நகர மாவட்டத் தலைவராக கிருஷ்ணராஜ் மற்றும் சோஷியல் மீடியா, ஊடகப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவினை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பிறப்பித்துள்ளார்.

Advertisement