மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.

மணக்குள் விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி, பேசுகை யில், 'கல்லுாரியின் சாதனைகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு, வாழ்வில் சிறந்த சாதனையாளர்களாக, தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்' என்றார்.

கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார்.

செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக மது அண்ட் கோ பட்டய கணக்காளர் மதுகுமார், புதுச்சேரி பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை டீன் ஜோசப் செல்வின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி, கல்லுாரியின் சிறப்பு அம்சங்கள், சாதனைகள் குறித்தும், கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய தேவைகளை தவிர, ஆடம்பர பொருட்களை தவிர்த்து, பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றார்.

வணிக மேலாண்மை துறைத்தலைவர் பால செந்தில்குமார், இயற்பியல் துறைத் தலைவர் ஜெயவர்த்தனன் ஆகியோர் நன்றி கூறினர்.

Advertisement