அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

கடலுார் : ஆடி முதல் வெள்ளியையொட்டி கடலுார் பகுதியிலுள்ள அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல், செடல் உற்சவம் நடந்தது.

கடலுார் மஞ்சக்குப்பம் ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று காலை பெண்ணை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சாகை வார்த்தல் நடந்தது.

மதியம் நடந்த செடல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு கும்பம் கொட்டுதல் நடந்தது. இன்று 19ம் தேதி ஆன்மிக சொற்பொழிவும், நாளை 20ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

சூரப்பநாயக்கன்சாவடி பெரிய பாளையத்தம்மன், புதுப்பாளையம் லோகநாயகி அம்மன், தரைகாத்த காளியம்மன், வண்டிப்பாளையம் அங்காள பரமேஸ்வரி உட்பட பல்வேறு கோவில்களிலும் சாகை வார்த்தல் நடந்தது.

Advertisement