என்.ஆர்.காங்., - பா.ஜ., மீது ஜனாதிபதியிடம் ஊழல் புகார் 22ம் தேதி காங்., குழு டில்லி பயணம்
புதுச்சேரி: என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசின் மீது ஊழல் புகாரை அளிக்க காங்., குழு வரும் 22ம் தேதி டில்லி செல்கிறது.
என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசின் மீது காங்., கட்சி தொடர்ந்து அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒருபடி மேலே போய் என்.ஆர்.காங்., ஆட்சியில் நடக்கும் ஊழல்களை கணக்கெடுத்து வருகிறோம். டில்லியில் மதுபான கொள்கையால் முதல்வரே சிறைக்கு சென்றதுபோல் அடுத்து காங். ஆட்சி அமைந்ததும்இங்குள்ள அமைச்சர்கள் சிறைக்கு செல்வர். அதற்கு முன் இந்த ஊழல் பட்டியலை ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம் என, தெரிவித்தார்.
அதை தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியாக ஊழல் பட்டியலை காங்., கட்சி, தயார் செய்து வந்தது. ஊழல் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் அடுத்து நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.
வரும் 22ம் தேதி புதுச்சேரியில் இருந்து புறப்படும் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், காங்., துணை தலைவர் தேவதாஸ், பொது செயலாளர் சங்கர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட காங்., குழு, ஜனாதிபதியை சந்தித்து என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு மீதான ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் அளிக்கிறது. இதற்காக 23 அல்லது 24ம் தேதி ஜனாதிபதியை சந்திக்க காங்., கட்சி அப்பாயிண்ட்மென்ட் கேட்டுள்ளது.
முன்னதாக காங்., கட்சி மூத்த தலைவர் ராகுல், செயல் தலைவர் கார்கேவையும் சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம், ஆளும் கட்சி மீதான ஊழல் புகார்கள் சம்பந்தமாக எடுத்துரைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி, சிவில் சப்ளை, மதுபான தொழிற்சாலை அனுமதி என, முக்கிய துறைகளில் நடந்த ஊழல்களை ஜனாதிபதியிடம் புகாராக தெரிவிக்க காங்., கட்சி திட்டமிட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை