வீடு கட்டுவதற்கான நிதி: முதல்வர் வழங்கல்

புதுச்சேரி : குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி அரசு, குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 2வது தவணையாக ரூ.1.60 லட்சம், 12 பேருக்கு 3வது தவணையாக தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.8.40 லட்சம் என, மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார்.

சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் சுதர்சன், இளநிலைப் பொறியாளர் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement