தி.மு.க., சட்டத்துறை தேர்தல் ஆலோசனை

மதுரை: 2026 சட்டசபை தேர்தலையொட்டி மதுரை நகர், வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க.,சட்டத்துறை சார்பில் உத்தங்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கோகுல் வரவேற்றார். மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை வகித்தார். தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், விழிப்புணர்வுடன் பணியாற்றுவது குறித்து பேசினார்.

வெங்கடேசன் எம்.எல்.ஏ.,சட்டத்துறை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், ராஜா முகமது, தேவசேனன், சிவனேசன் பங்கேற்றனர்.

Advertisement