சங்கரா பன்நோக்கு மருத்துவமனை மருத்துவ முகாமில் 122 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கான, கருத்தரித்தல் தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனை முகாமில், 122 பேர் பங்கேற்றனர்.

சங்கரா பன்நோக்கு மருத்துவமனை, சங்கரா கிருபா எஜுகேஷனல் மற்றும் மெடிக்கல் டிரஸ்ட், சென்னை அனந்தா கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம் சார்பில், காஞ்சிபுரம் ஏனாத்துார் சாலை, கோனேரிகுப்பத்தில் உள்ள சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம், நேற்று நடந்தது.இம்முகாமில் 122 பேர் பங்கேற்றனர். இதில், திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு, சிறப்பு ஆலோசனை மருத்துவ நிபுணர் டாக்டர் அனந்தலட்சுமி, கருவுறுதல் பற்றிய சிறப்பு ஆலோசனை வழங்கினார்.

மேலும், ஐ.யு.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., சிகிச்சைக்கான தனிப்பட்ட ஆலோசனை, பெண்களுக்கான ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை, நீர்க்கட்டி, கர்ப்பப்பை பிரச்னை பற்றியும், கருச்சிதைவு பற்றிய மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.

குழந்தையின்மை பற்றிய ஆலோசனைக்கு 90800 51015 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது.

இம்முகாமில், மருத்துவமனை மேனேஜிங் டிரஸ்டி. விஸ்வநாதன், சி.இ.ஓ., விஜயலக்ஷ்மி, டிரஸ்டி ஸ்ரீராம், மேலாளர் நந்தகுமார் பங்கேற்றனர்.

Advertisement