ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் 25ம் தேதி செடல்

கடலுார் : பழைய வண்டிப்பாளையம் எல்லை காளி அம்மன் மற்றும் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் வரும் 25ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.

கடலுார், பழைய வண்டிப்பாளையம் எல்லை காளி அம்மன் மற்றும் வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா, நேற்று காலை துவங்கியது. இன்று 21ம் தேதி காலை பந்தக்கால் நடுதல், கோ பூஜை நடக்கிறது.

23ம் தேதி இரவு மகா கணபதி ஹோமம், கலச பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சக்தி யாக வேள்வி, மகா சங்கல்பம், தீபாராதனை, 108 சங்காபிஷேகம், எல்லைக்காளி அம்மன் கலச அபிஷேகம் நடக்கிறது. 24ம் தேதி, காலை அரசு-வேம்பு திருக்கல்யாணம், மகா தீபாராதனை, இரவு எல்லை காளி அம்மனுக்கு காப்பு கட்டுதல், எல்லை கட்டுதல் நடக்கிறது.

25ம் தேதி காலை 9:30 மணிக்கு ஊத்துக்காட்டு மாரியம்மன் பெண்ணையாற்று கரங்களுடன் வீதிவலம், மதியம் 1:00 மணிக்கு 1008 குடநீர் மகா அபிஷேகம், 4:30 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது.

இரவு 8:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் ஊத்துக்காட்டு மாரியம்மன் வீதயுலா, உதிரவாய் துடைத்தல் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement