மனுக்கள் மீது நடவடிக்கை கலெக்டர் அறிவுரை
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின், அவர் பேசுகையில், தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் பயன்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வேறுபாடின்றி கிடைக்கும் வகையில், திங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம், நுகர்வோர் குறைதீர் முகாம், முன்னாள் ராணுவத்தினர்களுக்கான குறைதீர் முகாம், ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் முகாம் என, பல்வேறு முகாம்களில் ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன.
பெறப்பட்ட மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
மேலும்
-
''கூட இருந்து குழி பறித்தவர் அன்வர் ராஜா'': பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத்
-
விமான விபத்து விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்; பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்
-
அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக்!
-
அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி