குடியேறும் போராட்டம் அறிவிப்பு எதிரொலி அரசம்பட்டு மக்களுடன் சமாதானம் கூட்டம்

சங்கராபுரம் : குடியேறும் போராட்டம் அறிவிப்பு எதிரொலியால், அரசம்பட்டு கிராம மக்களுடன் சமாதான கூட்டம் நடந்தது.

அரசம்பட்டு கிராமம், 12வது வார்டில் மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மின்வாரியம், அஞ்சல் அலுவலகம் அமைக்க வேண்டும். வீடற்ற விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மா.கம்யூ.,வினர் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் சசிக்குமார், ஒன்றிய செயலாளர் சிவாஜி, கிளை செயலாளர்கள் மூர்த்தி, ராஜேந்திரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

மண்டல துணை தாசில்தார் பாண்டியன், தலைமையிடத்து துணை தாசில்தார் செங்குட்டுவன், வருவாய் ஆய்வாளர் திவ்யா சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கலந்துகொண்டனர்.

மக்களின் கோரிக்கைகள் 3 மாத காலத்திற்குள் முடித்து தருவதாக தாசில்தார் உறுதி அளித்தார். அதை ஏற்று இன்று 21ம் தேதி நடக்க இருந்த குடியேறும் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement