சேதமடைந்த சாலையை சீரமைக்க பாளையூர் மக்கள் எதிர்பார்ப்பு

செய்யூர்:பாளையூரில் சாலை சேதமடைந்து உள்ளதால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்யூர் அருகே, சித்தார்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாளையூர் கிராமத்தில் போந்துார் - செய்யூர் இடையே 10 கி.மீ., நீள தார் சாலை உள்ளது.

சாலை ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

அமந்தங்கரணை, வெடால், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செய்யூருக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பாளையூர் காப்புக்காடு அருகே 1.4 கி.மீ., சாலை பராமரிப்பு இன்றி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளதால், மழைகாலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.

ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement