ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற தேவிகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகம் மாநில வருவாய்த்துறை அமைச்சர் பாராட்டு

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே தேவி குளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழை அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் வழங்கி பாராட்டினார்.
தேவிகுளத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளது. மாநில வருவாய்த்துறை சார்பில் பொது மக்களுக்கு சிறந்த சேவை, ஆவணங்கள் பாதுகாப்பு, புகார்கள் மீது உடனடி தீர்வு, சுகாதாரம் மற்றும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி செயல்படுவது போன்ற செயல்பாடுகளுக்காக சிறந்த அரசு அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்களை ஆய்வு அடிப்படையில் கேரள அரசு வழங்கி வருகிறது.
அதன்படி சிறந்த முறையில் அரசு சேவைகளை நடைமுறைப்படுத்தி வரும் தேவிகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகம் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணனிடம் சிறந்த அலுவலகத்திற்கான சான்றிதழை வழங்கினார்.
அலுவலகம் சிறப்பான முறையில் செயல்படுவதாக கூறிய அமைச்சர் சப்கலெக்டர், ஊழியர்களை பாராட்டினார். தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும்
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு