வர்த்தகர் சங்க ஆண்டு விழா

நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டி வர்த்தகர் சங்க ஆண்டு விழா தலைவர் டெர்பின் ஜோசப் தலைமையில் நடந்தது. செயலாளர் செந்தில் வேல், பொருளாளர் சாமுவேல்ராஜ் முன்னிலை வகித்தனர். போலீஸ் டி.எஸ்.பி., செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிலக்கோட்டை வர்த்தகர் சங்க செயலாளர் ராஜேந்திரன், சங்க உறுப்பினர்களை வாழ்த்தினார். டாக்டர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள் வணிகர்கள் நல வாரியத்தில் இணைவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement