மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்

மும்பை: கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது; எனினும், அசம்பாவிதம் இன்றி விமானம் தரை இறங்கியது.
மும்பையில் கனமழை காரணமாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில், கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சென்றது.
சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார். அசம்பாவிதம் எதுவும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: விமானம், தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால், பயணிகள் பீதி அடைந்தனர்.
வாசகர் கருத்து (3)
bogu - ,
21 ஜூலை,2025 - 17:41 Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
21 ஜூலை,2025 - 14:20 Report Abuse

0
0
Reply
SANKAR - ,
21 ஜூலை,2025 - 14:12 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
-
விரைவில் விக்டோரியா ஹால்..
-
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
Advertisement
Advertisement