தி.மு.க., தலைவர்கள் வருகை'பாஸ்' வழங்குவதில் குழப்பம்

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு வரும் தி.மு.க., தலைவர்களை வரவேற்க அனுமதிக்கப்படும் 'பாஸ்'களில் கட்சியினர் குழப்பம் எற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தி.மு.க., தலைவர் வருகை, வழியனுப்பும் நிகழ்ச்சிகளில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

சம்பந்தப்பட்டோர் பெயர்களை முதல்நாளே அங்குள்ள தாசில்தாரிடம் வழங்க வேண்டும். முன்கூட்டியே வழங்கிய பெயர்கள் தான் 'ஒயிட் பாஸ்'களுக்கு தகுதிபெறும். கடைசி நேரத்தில் வரும் முக்கிய பிரமுகர்களை அனுமதிக்க அதற்கான அனுமதி பெற்ற 'சிலிப்'களில் பெயரை குறிப்பிட்டு வழங்குவர். இந்த சிலிப்புகளை கட்சியின் குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைப்பதால், அவர்கள் பாரபட்சமாக நடக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி வருகையின்போது ஒரு எம்.எல்.ஏ., இளைஞரணி துணை செயலாளரை அனுமதிக்காததால் குழப்பம் ஏற்பட்டது. அப்பிரச்னையை அமைச்சர் மூர்த்தி சமாளித்தார். நேற்றுமுன்தினம் கனிமொழியை வழியனுப்ப சென்றபோது பதவியிழந்த ஒரு மண்டல தலைவர் உள்பட சிலர் உள்ளே சென்றனர். அவர்களுக்கு பாஸ் வழங்கியது அறிந்து கனிமொழி கடிந்துகொண்டார். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்என்றனர்.

Advertisement