2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

1

புதுடில்லி: 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்து உள்ளது.


ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் வைஷாலி, ஹரிகா, ஹம்பி உள்பட 46 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், 2025ம் ஆண்டு ஆடவர் செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்து உள்ளது. அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. 206 வீரர்கள் நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள்.



செஸ் போட்டி நடைபெறும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். இது குறித்து பிடே தலைமை நிர்வாக அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி கூறியதாவது: செஸ் போட்டிகள் மீது ஆர்வமும், அதிக ஆதரவும் கொண்ட நாடான இந்தியாவில் 2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை போட்டி நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


செஸ் போட்டிகள் மீது இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2022ம் ஆண்டு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 150 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகள் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Advertisement