பண்பாட்டு போட்டி

மதுரை: மதுரை பழங்காநத்தம் டி.வி.எஸ்., பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் (டி.வி.எஸ்., லோசா) சார்பில் மாநில அளவிலான அறிவு, பண்பாடு சார்ந்த போட்டிகள் நடந்தன.

தமிழகம் முழுவதும் இருந்து 48 பள்ளிகளின் 2400 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், தேனி வேலம்மாள் வித்யாலயா உயர்நிலைப்பள்ளி முதலிடம், மதுரை அத்யாபனா சி.பி.எஸ்.இ., பள்ளி 2ம் இடம், திருநெல்வேலி கிங்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 3ம் இடம் பெற்றன. எஸ்.கே.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன் இயக்குநர்கள் ராஜ்குமார், யோஹானா, சங்கத் தலைவர் பசல் முஹம்மது யூசுப், செயலாளர் ராஜீவ் பரிசு வழங்கினர்.

Advertisement