சுப்பிரமணிய சுவாமிக்கு 107 வேல் பூஜை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமைந்துள்ள திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று மாலை வேல் பூஜை நடந்தது.
இதில், 107 வேல்களை வைத்து, சிறப்பு யாகம் நடத்தி, பூஜை செய்தனர். பின் அந்த, 107 வேல் பக்தர்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து அன்னதானமும், பாகவதர் சீனிவாசன் மற்றும் ராமச்-சந்திரனின் பக்தி பாடல்கள் பஜனை நடந்தது. முன்னதாக மூலவ-ருக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடு-களை பர்வத ராஜகுல ஊர் பொதுமக்கள் திருப்பணிக்குழுவினர் மற்றும் ஓம் சக்தி மன்றத்தினர் செய்திருந்தனர். * காவேரிப்பட்டணம் - பாலக்கோடு கூட்ரோட்டிலுள்ள சிவசுப்-பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகை திருவிழா-வையொட்டி, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
எர்ரஅள்ளி, போத்தாபுரம், அண்ணாநகர், சந்தாபுரம், பன்னி-அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி மற்றும் பால்குடங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவி-லுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவசுப்பிரமணிய சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* ஊத்தங்கரை அடுத்த, சரட்டூர் அழகுமலை மீது அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோவில், ஊத்தங்கரை வள்ளி, தெய்-வானை சுப்பிரமணிய கோவில், வண்டிக்காரன் கொட்டாய் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானை சுவாமி சிறப்பு அலங்-காரத்தில் காட்சியளித்தனர்.
தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்-தர்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டனர்.
மேலும்
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்