வெவ்வேறு இடத்தில் விபத்து மாணவன் உட்பட 2 பேர் பலி
காவேரிப்பட்டணம்: பர்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 56. பர்கூர் கஜாக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்தி, 38. துணி வியாபாரிகளான இருவரும், நேற்று முன்தினம் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றனர். கார்த்தி பைக்கை ஓட்டினார்.
தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பட்-டணம் அருகே ஜமேதர்மேடு பகுதியில் காலை, 10:30 மணிக்கு சென்ற போது, இருவரும் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்-தனர். இதில், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாய மடைந்த கார்த்தி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்-பட்டார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி அருகே பெரியகோட்டப்பள்ளியை சேர்ந்தவர் சீனி-வாசன் மகன் ரிஷிகரன், 9. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த தன் சித்தப்பா முருகேசன், 30, என்பவருடன், நேற்று முன்தினம் காலை ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார்.
பர்கூர் - திருப்பத்துார் சாலையிலுள்ள பார்டர் காட்டூர் அருகே காலை, 10:45 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற மாணவன் ரிஷிகரன், சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முருகேசன், அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!