'சிபில் ஸ்கோர்' நடைமுறையை கைவிட விவசாயிகள் வலியுறுத்தல்

அரூர்: விவசாயிகள், வங்கிகளில் கடன் பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள, 'சிபில் ஸ்கோர்' நடைமுறையை கைவிட, விவசாயிகள் வலியு-றுத்தி உள்ளனர்.


தர்மபுரி மாவட்டத்தில், பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. தாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும்பான்மையான விவசாயிகள் நஷ்டத்தை சந்-தித்து வருகின்றனர். இதனால், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெற்று, விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்-களில், விவசாயிகள் பயிர் கடன் பெற 'சிபில் ஸ்கோர்' கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்-துள்ள விவசாயிகள், 'சிபில் ஸ்கோர்' ஸ்கோர் நடைமுறையை கைவிட வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, அரூர் அன்னை பசுமை பூமி, துல்லிய பண்ணை விவசாயிகள் சங்க தலைவர் திருமலை கூறியதாவது:
ஏற்கனவே, விவசாயிகள் கரும்பு, மஞ்சள், நெல், மரவள்ளிகி-ழங்கு, தக்காளி உள்ளிட்டவைகளுக்கு உரிய விலை கிடைக்-காமல் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
ஆண்டுதோறும் ஏற்படும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால், சாகுபடி செய்த பயிர்கள் பாதித்து கடும் இழப்பு ஏற்படுகிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் பயிர் கடன் பெற, 'சிபில் ஸ்கோர்' கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகளுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை திரும்ப செலுத்தி விட்டால், மீண்டும் கடன் வழங்குவார்கள். பொதுத்துறை வங்கிகளில் தடை-யில்லா சான்று பெற்று கொண்டு வந்தால் மட்டுமே, பயிர் கடன் வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.
இதனால் விவசாயிகள், அதிக வட்டிக்கு வெளி இடங்கள், தனி நபர்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன்பெற வேண்-டிய சூழ்நிலை உள்ளது. எனவே, 'சிபில் ஸ்கோர்' நடைமு-றையை கைவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement