சேலத்தில் இன்று த.வெ.க., சார்பில் மாநில கொள்கை விளக்க கூட்டம்

சேலம்: த.வெ.க., சேலம் மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் அறிக்கை:

த.வெ.க., 2வது மாநில மாநாடு, ஆக., 25ல் மதுரையில் நடக்க உள்ளது.

இதுதொடர்பாக, முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள போஸ் மைதானத்தில், ஜூலை, 20(இன்று) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இதற்கு மாநில பொதுச்செயலர் ஆனந்த் தலைமை வகிக்கிறார். அதனால் மாவட்ட செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி வார்டு, கிளை செயலர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.

Advertisement