விவாகரத்து கேட்டதால் பெண் துாக்கிட்டு தற்கொலை
குளித்தலை: குளித்தலை நகராட்சி, மலையப்பன் நகரை சேர்ந்தவர் தேவி, 62; இவருடைய மகள் சக்திபொண்ணு, 40. இவரை, கண்டியூரை சேர்ந்த டிரைவர் கோபால் என்பவருக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். தம்பதியருக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடால், ஐந்தாண்டுகளுக்கு முன் சக்திபொண்ணு கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு, அரசு தேர்வில் வெற்றி பெற்று, குளித்தலை சார் கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். இரண்டு குழந்தைகள், கோபால் கவனிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில், கணவர் கோபால் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்ததால், விரக்தியடைந்த சக்தி பொண்ணு, நேற்று முன்தினம் மாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement