வாங்காலம்மன் கோவிலில் தங்க பொட்டு திருட்டு
கரூர்: வாங்கல் அருகே, கோவிலில் தங்க பொட்டை திருடிய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வாங்கலில் பிரசித்தி பெற்ற வாங்காலம்மன் கோவில் உள்ளது. அதில், கார்த்திகேயன் என்பவர், பூசாரியாக வேலை செய்து வருகிறார். கடந்த, 18 இரவு வழக்கமான பூஜைகள் முடிந்தவுடன், கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
மறுநாள் காலை, 7:30 மணிக்கு கார்த்திகேயன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, கோவில் கருவறை கதவு திறக்கப் பட்டிருந்தது. மேலும், கருவறையில் வைக்கப்பட்டிருந்த, நான்கு கிராம் தங்க பொட்டை காணவில்லை. இதுகுறித்து, கார்த்தி கேயன், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, கரூர் அறநிலையத்துறை ஆய்வாளர் சூர்யா, 30, போலீசில் புகார் கொடுத்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement