தனியார் சுயநிதி பள்ளிகள் நலச்சங்க கூட்டம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.

வீனஸ் பள்ளி தாளாளர் குமார், இணை தாளாளர் ருபியால் ராணி தலைமை தாங்கினர்.

தமிழ்நாடு சுயநிதி பள்ளிகளின் சங்க தலைவர் ஞானசம்பந்தர், செயலாளர் அய்யனார், பொருளாளர் செந்தில்நாதன். துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் ராஜாராமன் முன்னிலை வகித்தனர். வீனஸ் பள்ளி முதல்வர் லியோபெஸ்கி வரவேற்றார்.

கடந்த 2023---24 மற்றும் 2024--25ம் கல்வியாண்டிற்கு நிலுவையில் உள்ள இலசவ கட்டாய கல்விக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும்.

நடப்பு 2025--26ம் ஆண்டிற்கான இலவச கட்டாய கல்வி சேர்க்கையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பள்ளிகளின் அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறையில் உள்ளதை மாற்றியமைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்

Advertisement