திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: 'தமிழகத்தில் இதுவரை இடிந்து விழுந்த அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்' என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது. நேற்று விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டடங்கள் கட்டுவதில் கூட, தி.மு.க., அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், தி.மு.க. அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா?
கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., அரசு எந்தெந்த மாவட்டங்களில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டியுள்ளன என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு, ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கடிதம் எழுதி நாடகமாடியதோடு நிறுத்திக் கொண்டார் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசு கட்டிய கட்டடங்கள் அனைத்தையுமே, தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது, அனைத்துத் தரப்பு மக்களுக்குமே நல்லது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (18)
vbs manian - hyderabad,இந்தியா
21 ஜூலை,2025 - 19:16 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
21 ஜூலை,2025 - 17:34 Report Abuse

0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
21 ஜூலை,2025 - 17:34 Report Abuse

0
0
Reply
R.P.Anand - ,இந்தியா
21 ஜூலை,2025 - 17:00 Report Abuse

0
0
Reply
panneer selvam - Dubai,இந்தியா
21 ஜூலை,2025 - 16:53 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
21 ஜூலை,2025 - 16:41 Report Abuse

0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
21 ஜூலை,2025 - 16:36 Report Abuse

0
0
அயோக்கிய திருட்டு திராவிடன் - ,
21 ஜூலை,2025 - 17:59Report Abuse

0
0
Nagendran,Erode - ,
21 ஜூலை,2025 - 18:06Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
21 ஜூலை,2025 - 19:48Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21 ஜூலை,2025 - 16:31 Report Abuse

0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
21 ஜூலை,2025 - 16:01 Report Abuse

0
0
Reply
Gopalan - ,
21 ஜூலை,2025 - 15:56 Report Abuse

0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
-
விரைவில் விக்டோரியா ஹால்..
-
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement