கிருஷ்ணராயபுரம் யூனியனில் நாவல் பழம் விற்பனை ஜோர்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம், மாயனுார், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை, பொய்கைப்புத்துார், வளையகாரன்புதுார், சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நாவல் மரங்களை அதிகம் வளர்க்கின்றனர். தற்போது, நாவல் பழம் சீசனால், விளைச்சல் அதிகரித்துள்ளது. பழுத்த நாவல் பழங்களை மண்ணில் விழாமல், வலை விரித்து பறிக்கின்றனர்.


நாவல் பழம் மருத்துவ குணம் கொண்டதால், விற்பனை சூடு பிடித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களான, லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப், கிருஷ்ணராயரபுரம், மாயனுார், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. படி ஒன்று, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் நாவல் பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Advertisement