தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் தொகுதி, காணை கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கொத்தமங்கலம் மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பணியை நேரில் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார்.

ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வம், விவசாய அணி துணை தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

அப்போது, ஊராட்சி தலைவர் விமலா அறிவழகன், கிளைச் செயலாளர்கள் மணிகண்டன், ராஜேந்திரன், ராஜேஷ், காளிதாஸ், நிர்வாகிகள் சிவக்குமார், சுந்தரமூர்த்தி, சவுந்தர் பாண்டியன், சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement