தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டி, தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் அன்புமணி எம்.பி., தலைமை தாங்கி, தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., வரவேற்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி, மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி, அமைப்பு செயலாளர் மணிமாறன், தலைவர்கள் தங்கஜோதி, சேது, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் செழியன், தலைவர் சத்யா, மேற்கு செயலாளர் தமிழரசன், தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொது செயலாளர் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு, தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன், தலைவர் தாமரைக்கண்ணன், இணை பொது செயலாளர் வைத்தி, இளைஞரணி செயலாளர் கங்காதரன், அமைப்பு தலைவர் திருமாவளவன், செயலாளர் தர்மா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் அன்புமணி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல், துணை தலைவர் மணிமாறன், துணை செயலாளர் தியாகராஜன், மாணவரணி துணை செயலாளர் பெருமாள், பசுமை தாயகம் மாவட்ட தலைவர் மணிகண்டன், கொள்கை பரப்பு செயலாளர் சுப்பிரமணி, மருத்துவரணி செயலாரள் ராஜா, கொள்கை விளக்க அணி செயலாளர் பாலாஜி, கிளை செயலாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அமைப்பு செயலாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
மேலும்
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு