குட்கா கடத்திய 2 பேர் கைது

விழுப்புரம் : மொபட்டில் 4 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் தலைமையிலான போலீசார், கல்பட்டு - ஒட்டன்காடுவெட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மொபட்டை சோதனை செய்தனர்.

அதில், 4 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்த மாம்பழப்பட்டு பழைய காலனியைச் சேர்ந்த கணேசன், 37; பிரபாகரன், 35; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

Advertisement