ஆறுமுக பெருமான் கோவிலில் மிளகாய் பொடி அபிேஷகம்

திண்டிவனம் : திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது.

திண்டிவனம் கிடங்கல் (1) அறம் வளர்த்தநாயகி உடனுறை அன்பகநாயக ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமானுக்கு 59ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நேற்று நடந்தது.

இதையொட்டி காவடி, செடல், பூ தேர் மற்றும் வேல் பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் 25 பேருக்கு நேர்த்திக் கடனாக மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.

பின், மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், மழுவடி சேவை, அடியார்கள் 108 பேருக்கு செடல் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் தீ மதிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement