ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேர் கைது காரைக்காலில் 3 பேர் கைது

காரைக்கால் : ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், நெடுங்காடு அகரமாங்குடி வடக்குத் தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தி,36; தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரை, கடந்த 2023ம் ஆண்டு அணுகிநெடுங்காடு, வாதிருப்பு சாலையை சேர்ந்த நீலமேகம், 45;என்பவர், காரைக்கால் ஜிப்மர் மருந்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கு,ரூ. 2.50 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய தட்சிணாமூர்த்தி முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய்கொடுத்துள்ளார்.இதையடுத்து,நீலமேகம் ஜிப்மர் மருந்துவமனையின்கண்காணிப்பாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை தட்சிணாமூர்த்தியிடம் கொடுத்து , மேலும் ரூ.1.50 லட்சம் கேட்டுள்ளார்.இதற்கிடையே, தட்சிணாமூர்த்தி ஜிப்மர் மருந்துவமனையில் விசாரித்தபோது, அவரிடம் வழங்கப்பட்ட பணி ஆணை போலியானது என்று தெரியவந்தது.

இதேபோல், காரைக்காலைச் சேர்ந்த சூசைமேரி, மங்கையர்கரசி, தரனிஷ், வாசு தேவன் ஆகியோரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி நீலமேகம் ரூ.2.55 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் நீலமேகம், புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த ராஜகணபதி, 25; ஜானகிராமன், 25; திருநள்ளாரை சேர்ந்த காயத்ரி,40;ஆகியோர் மீது நெடுங்காடு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதில், ராஜகணபதி, ஜானகிராமன், காயத்ரி ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்

Advertisement