வணிகர்கள் விவகாரம்: சித்தராமையா விளக்கம்
பெங்களூரு : ''ஆன்லைன் பரிவர்த்தனை விஷயத்தில் வணிக வரி அதிகாரிகளுடன் ஆலோசித்து, வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தார்.
மைசூரு எச்.டி.கோட்டில் அவர் அளித்த பேட்டி:
மைசூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், துணை முதல்வர் சிவகுமாரை நான் அவமதித்ததாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். மாநாட்டு மேடையில் சிவகுமார் இல்லாததால் அவரது பெயரை குறிப்பிடவில்லை.
எனக்கும், சிவகுமாருக்கும் இடையில் பிளவு ஏற்படுத்தும் நோக்கில் பா.ஜ., செயல்படுகிறது.
ஆன்லைன் பரிவர்த்தனைகளை கணக்கிட்டு, வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தும்படி வணிக வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஜி.எஸ்.டி., மத்திய அரசின் நிதி துறைக்கு உட்பட்டது.
வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு, நாங்கள் பொறுப்பு இல்லை. ஆனாலும் வணிக வரி அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசித்து, வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
-
இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு