இலவச கண் சிகிச்சை முகாம்
ப.வேலுார்: ப.வேலுார் அரிமா சங்க சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை நடந்தது. கண்புரை உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 148 பேர், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். புற நோயாளியாக, 338 பேர் சிகிச்சை பெற்றனர். ப.வேலுார் அரிமா சங்க தலைவர் அருண்குமார், செயலாளர் அரசகுமார், சதீஷ்குமார், பொருளாளர் கிஷோர் உள்பட கலந்துகொண்டனர்.
இலவச கண் சிகிச்சை முகாமிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்ல இலவச பஸ் வசதிகளையும், அரிமா சங்க நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
Advertisement
Advertisement