ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

2

புதுடில்லி; லோக்சபாவில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி 16 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.


@1brபரபரப்பான அரசியல் சூழலில் பார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 21 அமர்வுகள் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


ஆனால் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கோரி, அவர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து அவர்கள் இடையூறு செய்து கொண்டே இருந்ததால் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.


இந்நிலையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேரம் அவையில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டு உள்ளது. இந்த விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வாரம் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதே இதற்கு காரணம். அவையில் விவாதம் நடத்தப்படும் போது பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். எனவே அடுத்த வாரம் விவாதம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

Advertisement