மா.திறனாளிகளுக்கு ராசிபுரத்தில் சிறப்பு முகாம்


ராசிபுரம்: ராசிபுரத்தில், விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. நீண்ட கால நோய்களுக்கு தீர்வு, மூட்டுவலி, சர்க்கரை, மன அழுத்தம், தலைவலி, நோய்நிலைப்படி மருந்துகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமை மருத்துவ கல்லுாரியை சேர்ந்த ஜெகத் அருண் தொடங்கி வைத்தார்.


இவர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையுடன் இணைந்து அம்ருத் டிரஸ்ட் செய்திருந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என, 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement