தொடர் மழையால் மகிழ்ச்சி


ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில், சில நாட்களாகவே வானம் மேக மூட்டத்துடன் வெயில் குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, தண்ணீர்பந்தல்காடு, காக்காவேரி, சீராப்பள்ளி, பட்டணம், ஆர்.புதுப்பட்டி, முத்துக்காளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் துாறல் மழை பெய்ய தொடங்கியது. காற்றுடன் பெய்த மழை, இரவு, 8:30 மணிவரை தொடர்ந்தது.


இதேபோல், நேற்று மாலையும், 5:00 மணிக்கு தொடங்கிய மழை இரவு, 9:00 மணி வரை துாறலுடன் பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து, இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், சாலையோரம், குட்டை, வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement