மண்டல அளவில் வினாடி- - வினா போட்டி நேஷனல் பப்ளிக் பள்ளி இறுதி சுற்றுக்கு தகுதி


நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ரோட்டரி சங்கம், ரோட்டரி சங்கம் சென்னை கேலக்ஸி, க்விஸ் பவுண்டேஷன் சார்பில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகளுக்கான, மண்டல அளவிலான வினாடி - -வினா போட்டி, குமாரபாளையத்தில் நடந்தது. அதில், ஏழு மாவட்டங்களில் உள்ள, 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 120 அணிகள் பங்கேற்றன. போட்டியில், நேஷனல் பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.


அவர்கள், முதலாவதாக அனைத்து மாணவர்களுக்கும் எழுத்து தேர்வு நடந்தது. அதில் தேர்வு செய்யப்பட்ட எட்டு பள்ளிகளைச் சேர்ந்த, எட்டு அணிகள் மட்டும், இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. அதில், நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள், இரண்டாவது சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு அணிகள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதியானவர்கள் என, அறிவிக்கப்பட்டது. அதில், நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒரு அணி என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசாக ஒரு பென்டிரைவ், பேக், ஷீல்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வரும், 29ல் சென்னையில் நடக்கும் இறுதி போட்டியில் பங்கேற்பர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் சரவணன், முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement