அடிதடி தகராறில் 6 பேர் மீது வழக்கு
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி, சந்திரம்பாளையம் சுடுகாடு அருகே, நேற்று காலை சிலர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், 26, அவரது நண்பர் பிரபு, 27, ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சுபாஷ், 29, மதியழகன், 22, சுபாஷ், நவீன், 22, ஹரிபிரகாஷ், 22, கார்த்திகேயன், 25, கதிரவன், 26, ஆகியோர், விக்னேஷ், பிரபுவை தாக்கினர். இதில், விக்னேஷ், பிரபு காயமடைந்தனர்.
அவர்கள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, விக்னேஷ் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து, நவீன், ஹரிபிரகாஷ், கார்த்திகேயன், கதிரவன் ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
Advertisement
Advertisement