காமராஜர் குறித்து அவதுாறு கருத்து: நாடார் சங்கம் போலீசில் புகார்

கோவை; காமராஜர் குறித்து அவதுாறு கருத்துக்களை தெரிவித்த, எம்.பி., சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில், மாநில செயலர் இளையராஜா தலைமையில் நிர்வாகிகள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு:

'கடந்த 15 ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., துணைப் பொதுச்செயலர் சிவா, காமராஜரை அவதூறாகவும் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். அவர் பேசியது முழுக்கப் பொய்.

காமராஜர் குறித்து, இது போன்ற பொய் தகவல்கள் கூறியது, தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் தொண்டர்களும் தி.மு.க.,வினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. காமராஜர் குறித்து அவதூறாக பேசிய சிவா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement