கராத்தே பயிற்சியாளர் சாலை விபத்தில் பலி

கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் வசித்தவர் பிரகாஷ் என்கிற முகமது அலி, 46; கராத்தே பயிற்சியாளர்.

நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான மல்லியங்குப்பம் கிராமத்திற்கு சென்று, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

புதுவாயல் சந்திப்பு அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானார்.

படுகாயங்களுடன் பொன்னேரி அரசு பொது மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement