ஜூலை 30ல் விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைகோள்: இஸ்ரோ அறிவிப்பு

புதுடில்லி: வரும் ஜூலை 30ம் தேதி அன்று மாலை இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து தயார் செய்துள்ள நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது.
இது குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது:
வரும் ஜூலை 30ல் மாலை 5.40 மணிக்கு நிசார் எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க செயற்கை கோள், நாசாவுடன் இணைந்து ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 மூலம் நாசாவுடன் இணைந்து முதல் முறையாக இயக்கப்படுகிறது. இந்த செயற்கைகோள் பூமியை பற்றிய கண்காணிப்புக்கு பெரிதும் பயன்படும்.
"நிசார்" ஒவ்வொரு 12 நாட்களுக்கும் முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து, உயர் தெளிவுத்திறன், அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு தரவை வழங்கும்.
இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
கடல் பனி கண்காணிப்பு, கப்பல் கண்டறிதல், புயல் கண்காணிப்பு, மண் ஈரப்பத மாற்றங்கள், மேற்பரப்பு நீர் மேப்பிங் மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல முக்கியமான பயன்பாடுகள் குறித்து பணிகள் மேற்கொள்ளும். இது இஸ்ரோ-நாசா இடையே 10 ஆண்டுக்கும் மேலான ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லாக அமையும்.
இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும்
-
ஹிந்து முன்னணி நிர்வாகி புதுவையில் வெட்டி கொலை
-
திருச்சி சிவா வீடு முற்றுகை?
-
சாத்தான்குளம் வழக்கு: அப்ரூவராகிறார் இன்ஸ்பெக்டர்
-
வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை; 8,000 வீடியோக்களை அழிக்கவும் கோர்ட் உத்தரவு
-
பாகிஸ்தானுக்கான ஈரான் துாதரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்
-
கழுத்தை அறுத்து 7 வயது மகளை கொன்ற கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற தந்தை 'சீரியஸ்'