திருச்சி சிவா வீடு முற்றுகை?

2

திருச்சி : காமராஜர் பற்றி அவதுாறு பேசி சர்ச்சையில் சிக்கிய தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா வீட்டை, தமிழர் தேசம் கட்சியினர் முற்றுகையிட முயன்று மறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி, சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுக்கூட்டத்தில் பேசினார். இதற்கு, அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது, தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழர் தேசம் கட்சியினர், காமராஜர் பற்றி அவதுாறு பேசிய எம்.பி., சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சியில் உள்ள எம்.பி., சிவா வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை முன்னதாகவே போலீசார் தடுத்து நிறுத்தியதால், அக்கட்சியினர், சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்னர்.

Advertisement