பாகிஸ்தானுக்கான ஈரான் துாதரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்

இஸ்லாமாபாத்,: பாகிஸ்தானுக்கான ஈரான் துாதர் ரெசா அமிரி மொகாதம் மீது, கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதால், பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஈரான் துாதராக ரெசா அமிரி மொகாதம், 2023ல் இருந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் எப்.பி.ஐ., சிறப்பு அதிகாரி ராபர்ட் பாபை கடத்திய வழக்கில் இவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ல் எப்.பி.ஐ., அதிகாரியான பாப், ஈரானில் தங்கியிருந்தார். கடைசியாக கிஷ் தீவில் காணப்பட்ட அவர், அதன் பின் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இது குறித்து ஈரான் உளவு மற்றும் ராணுவ அமைச்சகத்தில் அதிகாரிகளாக இருந்த மூவர் மீது அமெரிக்கா தடையை அறிவித்தது. அதில் பாகிஸ்தானுக்கான ஈரான் துாதர் மொகாதமும் ஒருவர்.
இந்நிலையில், அந்த மூவர் குறித்த விபரங்கள் தெரிவித்தால், 40 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கூறி, எப்.பி.ஐ., போஸ்டர் வெளியிட்டுள்ளது. துாதரக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத செயல் இது, என கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தால் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நட்புறவை பேணும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், 'பாகிஸ்தான் - ஈரான் உறவை வலுப்படுத்தியதற்காக ஈரான் துாதர் மொகாதம் பரவலாக மதிக்கப்படுகிறார். ஒரு துாதருக்கு உரிய அனைத்து சலுகைகள், விலக்குரிமைகள் அவருக்கு உண்டு' என கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மோசடியில் இது புதுசு: போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது
-
அரசு பஸ் மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு