10 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: வங்கதேசத்தினர் மீது அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

1

குவகாத்தி்: அசாமில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவர்களால் 10 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த 2021ல் கோருகூட்டி பல்நோக்கு வேளாண் திட்டம் நிறுவப்பட்டது. இந்த திட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விழாவில் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:

2021ம் ஆண்டில், 25,500 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதற்காக பல்நோக்கு வேளாண் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 4 ஆண்டுகளில் 43,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுள்ளோம்.

இந்த வெற்றிகரமான பணி, எங்களுக்கு பெரிய ஊக்கத்தை அளித்தது. அதனை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்டு காடு வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஒரு அங்குல நிலம் கூட விடாமல் மீட்டுவிடுவோம் என்று உறுதி மொழி எடுத்துள்ளோம்.

இன்னும் 10 லட்சம் ஏக்கர் நிலம் வங்கதேச குடிமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீட்போம்.

இவ்வாறு ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசினார்.

Advertisement