ஆதார் ஒப்படைப்பு போராட்டம்

விருதுநகர்: விருதுநகரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அடிப்படை வசதி கோரி ஸ்ரீவில்லிபுத்துார் என்.சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்தவர்கள் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்துார் என்.சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த ஊர் நாட்டாண்மை செல்லப்பாண்டி தலைமையில், கலெக்டர் சுகபுத்ராவிடம் மக்கள் அளித்த மனுவில், குடிநீர் பற்றாக்குறை, சேதமடைந்த கழிப்பறை கட்டடம், சேதமடைந்த ரோடுகள் குறித்து புகார் அளித்துள்ளனர். நேற்று ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். மனுவை பெற்ற கலெக்டர் சுகபுத்ரா, ஒரு வாரத்திற்குள் நேரில் ஆய்வு செய்வதாக கூறினார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement