எங்கும் பாலிதீன் பைகளால் கால்நடைகளுக்கு ஆபத்து

திருவாடானை,: பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாடானை பகுதியில் கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.

மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டதால் போதிய தீவனம் கிடைக்காமல் கால்நடைகள் அவதிப்படுகின்றன. வீட்டில் வைத்து வளர்க்க முடியாததால் கால்நடை வளர்ப்போர் அவைகளை அவிழ்த்து விடுகின்றனர்.

இதனால் கால்நடைகள் புல் மற்றும் தீவனங்களோடு பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுகின்றன. அவற்றை சாப்பிடும் ஆடு, மாடுகளுக்கு ஜீரண சக்தி இல்லாமல் வயிற்று நோய் ஏற்படுகின்றன. பாலிதீன் பைகள் வயிற்றுக்குள்ளேயே தங்கி தீராத செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

நேற்று முன்தினம் திருவாடானை மங்களநாதன் குளம் அருகே மேய்ச்சலுக்காக சென்ற ஆட்டின் தலையில் பாலிதீன் பை சிக்கி கொண்டது. அங்கும், இங்குமாக அலைந்த அந்த ஆட்டை பார்த்த சிலர் பையை தலையிலிருந்து எடுத்து விட்டனர்.

பாலிதீன் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement