ஜூலை 30ல் நாகநாத சுவாமி- சவுந்தர்யநாயகி திருக்கல்யாணம் ஜூலை 27 அம்பாள் தேரோட்டம்

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண விழாவில் ஜூலை 30ல் திருக்கல்யாணமும் முன்னதாக 27 ல் அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற பெருமை பெற்ற சவுந்தர்ய நாயகி, நாகநாதர் சுவாமி கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண விழாவில் நேற்று முன் தினம் கொடியேற்றப்பட்டது. தினமும் அம்பாள் காலை, இரவு வீதிவலம் வருகிறார். அப்போது வெள்ளி பல்லக்கு, அன்னம், சிம்மம், கமலம், ரிஷபம், கிளி, குதிரை, காமதேனு வாகனங்களில் வலம் வருகிறார்.

ஜூலை 27 காலை 6:00 மணிக்கு மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் மஞ்சள் விளையாட்டு மற்றும் ஜூலை 29 அம்மன் தபசு திருக்கோலத்தில் தபசு மண்டபம் எழுந்தருளுவார்.

ஜூலை 30 காலை 9:00 மணிக்கு மேல் நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு மின் தீப அலங்கார தேரில் வலம் வருவர். ஆக.,3ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.

Advertisement