ஆனைப்பள்ளத்தில் பல் சிகிச்சை முகாம்

உத்திரமேரூர், ஆனைப்பள்ளத்தில் பல் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.

உத்திரமேரூர் பேரூராட்சி, ஆனைப்பள்ளம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளியில், உத்திரமேரூர் ரோட்டரி சங்கம் மற்றும் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், பல் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.

ரோட்டரி சங்க தலைவர் கெளதம்சந்த் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் அறிவழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.

அதில், பல் சுத்தம் செய்தல், பல் எடுத்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் பங்கேற்றவர்களுக்கு உணவு உட்கொண்ட பின், வாய் சுத்தப்படுத்தி, பற்களை துாய்மைப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த முகாமில் 200 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.

Advertisement