24, 31ம் தேதி விஜயவாடா ரயில் தாமதம்

சென்னை,'சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடா செல்லும் 'பினாகினி' விரைவு ரயில், வரும் 24, 31ம் தேதிகளில் தாமதமாக புறப்பட்டு செல்லும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில் களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளன.

அதன்படி, சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி விரைவு ரயில், வரும் 24ம் தேதியில் மதியம் 2:05 மணிக்கு பதிலாக மாலை 3:05 மணிக்கும், வரும் 31ம் தேதி மதியம் 2:05 மணிக்கு பதிலாக, மாலை 3:35 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

Advertisement